சனி, 23 பிப்ரவரி, 2013

அடுத்த தலைமுறைக்கு ....



அடுத்த தலைமுறைக்கு 
வாழ்வதற்கான செல்வங்களை
நம்பிக்கையாய் விட்டு செல்வதை விட 
வாழ்வதற்கான நம்பிக்கையை 
செல்வமாய் விட்டு செல்வோம் !!

உங்கள்  குழந்தைகளுக்கு நம்பிக்கையை ஊட்டுங்கள்..
அவர்கள் மீதான நம்பிக்கையை !!

மூன்றாம் உலகப்போர்

  














மூன்றாம் உலகப்போர் 

முற்றுப்புள்ளியாய் 
அமீபா ஆண்ட அகிலம்.

முதல் புள்ளியாய் - 
வீணடிக்கப்படும் 
தெருக்குழாய் தண்ணீர் !!

புதன், 13 பிப்ரவரி, 2013

!! வளர்ச்சி ??















முன்பெல்லாம்
வீடுகள் விலகி இருக்கும் 
மனிதர்கள் நெருங்கி இருப்பார்கள் ...

இப்பொழுது 
வீடுகள் நெருங்கி இருக்கின்றன 
மனிதர்கள் விலகி இருக்கிறார்கள் ....

ஓவியம் : அசோக் ராம் .


   

அன்பு !!!






அன்பு என்பது எப்படி இருக்க வேண்டும் ???

நம் வயிற்றுக்கு போதும் என்று தெரிந்தும்
அம்மாவினால்
கூடுதலாக வைக்கப்படும்


ஒரு தோசை போலவோ
இரண்டு இட்லி போலவோ ...   

இதய வெப்பமயமாதல் !!

அன்பே 
போதும் உனது 
கார்பன் பார்வைகள் ..

சல்லடையாகிப்  போகிறது 
எனது 
உள்ள- "OZONE"..


புதன், 24 அக்டோபர், 2012

புதன், 28 டிசம்பர், 2011

மான்குட்டி சுமந்த ஆட்டுக்குட்டி





















ஆட்டுக்குட்டி ஒன்றைச் சுமந்து 
நேற்று ஊருக்குள் 
உலாப் போனாயா ???

இப்பொழுது பார் 
மான்குட்டி சுமந்த 
ஆட்டுக்குட்டி என்று 

ஆடு அதிசயம் ஆகிப் போனது ....